சென்னை ஆக, 31
ரஜினி, கமல் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களின் படங்களை இயக்கி இயக்குனர் இமயம் என்ற பெயரினை பெற்றவர் பாரதிராஜா. தற்போது படங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு காரணமாக பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் பலர் விசாரித்து வந்த நிலையில், சிகிச்சையில் இருக்கும் பாரதிராஜாவை நேரில் சந்தித்துள்ளார் ராதிகா சரத்குமார். விரைவில் அவர் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.