கொடைக்கானல் ஆக, 31
கொடைக்கானலில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், பழனி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பருவ நிலை மாற்றம் காரணமாக கொடைக்கானலில் வழக்கத்திற்கு மாறாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகமான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் கொடைக்கானல் மற்றும் வில்பட்டி, பெருமாள்மலை, பிரகாசபுரம், பெரும்பள்ளம், வட்டக்கானல், மச்சூா், மயிலாடும் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழையால் மின்தடை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை பொதுமக்களின் பிரதான சாலையாகும். இதனை உடனடியாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைனையடுத்து தமிழக நெடுஞ்சாலை துறை வருவாய்த்துறை மற்றும் பொது மக்களின் கோரிக்கைக்கு இணங்க உடனடி போர்க்கால நடவடிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் இச்சாலையை சீரமைக்க உத்தரவிட்டுள்ளார். எனவே சாலையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.