Month: August 2022

மாவட்ட ஆட்சியர் நீர் நிலைகளில் ஆய்வு.

காஞ்சிபுரம் ஆக, 27 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வெளியூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை ஆய்வு செய்தார். மேலும் கரையோரங்களில் உள்ள குப்பைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தூய்மைப்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ…

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி. கொண்டாடிய நடிகர்கள்.

சென்னை ஆக, 27 மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியானதை அடுத்து…

கண் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம்

சென்னை ஆக, 27 சென்னை எழும்பூரில் 65.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களுடன் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் மருத்துவச் சேவை ஊர்திகள் மற்றும் நவீன மருத்துவக் கருவிகளை அரசு…

நடுக்கடலில் தீப்பிடித்த பயணிகள் கப்பல்.

பிலிப்பைன்ஸ் ஆக, 27 ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரில் இருந்து பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் இருந்தனர். துறைமுகத்தை நெருங்கியபோது கப்பலில்…

காட்டு யானைகளை விரட்ட வன ஊழியர்களுக்கு சைரன்

நீலகிரி ஆக, 27 கூடலுார் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டு யானைகள், விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவதுடன், மக்களையும் தாக்கி வருவது அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் வகையில், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு…

துணை செவிலியர் பயிற்சி பள்ளி திறப்பு.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 27 ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில், ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை செவிலியர் பயிற்சி பள்ளி கட்டடத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.…

அமீரகத்தில் கோல்டன் விசா பெற்ற கீழக்கரை இளைஞருக்கு பாராட்டு.

கீழக்கரை ஆக, 27 ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவையில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் என்ற கோல்டன் விசா அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது. மனிதநேயத்திற்கான இந்த விசாவை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த…

தொன்மை பொருட்கள் கண்காட்சி

பெரம்பலூர் ஆக, 27 குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பாக கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் கண்காட்சியை…

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை.

சென்னை ஆக, 27 சர்வதேச 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை, மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த 28ம் தேதி நடந்த போட்டியின் துவக்க விழாவுக்கு, பிரதமர் மோடி வந்த நிலையில், சென்னை,…

கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு

திருப்பூர் ஆக, 27 திருப்பூர் மாவட்டம், போடிப்பட்டி கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். குறைதீர்க்கும் கூட்டம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும்…