ராமநாதபுரம் ஆகஸ்ட், 27
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில், ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை செவிலியர் பயிற்சி பள்ளி கட்டடத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் துணை செவிலியர் பயிற்சி பள்ளி மையத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், ராமநாதபுரம் நாடாளுமன்ற
உறுப்பினர், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.