நீலகிரி ஆக, 27
கூடலுார் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டு யானைகள், விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவதுடன், மக்களையும் தாக்கி வருவது அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் வகையில், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வாகனங்களில் மட்டுமே சைரன் பொருத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், யானைகளை எளிதாக விரட்டும் வகையில், வன ஊழியர்களுக்கு, முதல் முறையாக, கையடக்க சைரன் ஒலி எழுப்பும் கருவி வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள ஒலி கேட்கும்போது யானைகள் ஓடி விடுகின்றன. வன ஊழியர்கள் கூறுகையில்,’கையடக்க கருவியை, எளிதாக எடுத்து சென்று, சைரன் ஒலி எழுப்பி யானைகளை விரட்டவும், நடமாட்டம் குறித்த தகவல்களை பதிவு செய்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யவும் வசதியாக உள்ளது’ என்றனர்.