நீலகிரி ஜூலை, 16
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தொடர் மழை காணாதமாக கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.