கோவை ஜூலை, 19
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்த வில்வித்தை வீராங்கனை கண்மணிக்கு 2.8 லட்சம் மதிப்பில் வில்வித்தை உபகரணங்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார். அதேபோல தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய சைக்கிள் வீரர் சங்கருக்கு 16 லட்சம் மதிப்புள்ள சைக்கிள் வழங்கப்பட்டது.