ராஜஸ்தான் ஜூலை, 19
ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மத்திய பிரதேசம் மாநிலங்களில் உள்ள 49 மாவட்டங்களை பிரித்து பில் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என பில் சமூகத்தினர் பேரணி நடத்தி உள்ளனர். ஆனால் ஜாதி அடிப்படையில் மாநிலத்தை உருவாக்க முடியாது என்றும் அவ்வாறு நடந்தால் மற்ற சமூக மக்களும் இதுபோன்று கோரிக்கை வைப்பார்கள் எனவும் ராஜஸ்தான் மாநில பழங்குடியினத்துறை அமைச்சர் பாபுலால் கராடி தெரிவித்துள்ளார்.