Spread the love

நீலகிரி ஜூலை, 27

மூத்த அரசியல் தலைவரும் நீலகிரி தொகுதி முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான மாஸ்டர் மதன் வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் 1998 முதல் 1999 மற்றும் 1999 முதல் 2004 வரை இரண்டு முறை மக்களவை பாராளுமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். படுகர் இனத்தை சேர்ந்த இவர் அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் நம்பிக்கைக்கு உரியவராக வழங்கினார். இந்நிலையில் அவரது மறைவுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *