ராமநாதபுரம் ஜூலை, 27
ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். சுதந்திர தின விழாவில் தியாகிகளில் கௌரவிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் பணிகளை திட்டமிட்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.