சென்னை ஜூலை, 27
பட்ஜெட்டை கண்டித்து தமிழக முழுவதும் திமுக நடத்த உள்ள போராட்டம் வேடிக்கையானது என தமிழக பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் துரைசாமி விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும், அதன் மூலம் தமிழகமும் பயன்பெறும் என்றார். மேலும் தெற்கு ரயில்வேக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.28,400 கோடிக்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்