திருப்பூர் ஆக, 27
திருப்பூர் மாவட்டம், போடிப்பட்டி கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். குறைதீர்க்கும் கூட்டம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் உடுமலை
மாவட்ட வருவாய் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் விவேகானந்தன், உடுமலை தாசில்தார் கண்ணாமணி, மடத்துக்குளம் வட்டாட்சியர் சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்