சென்னை ஆக, 27
சென்னை எழும்பூரில் 65.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களுடன் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மேலும் மருத்துவச் சேவை ஊர்திகள் மற்றும் நவீன மருத்துவக் கருவிகளை அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் பொது சுகாதாரத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட களப்பணி உதவியாளர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தாளுநர்கள் மற்றும் தமிழ்நாடு சுகாதார போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திறன்மிகு உதவியாளர் நிலை-II மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையில் கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர், ஊர்தி ஓட்டுநர், என மொத்தம் 236 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதன் முதற்கட்டமாக முதலமைச்சர் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.