சென்னை ஆக, 27
வளிமண்டல காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மதுரையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.
சென்னையில் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் , செம்பரம்பாக்கம் திருவேற்காடு, ஆவடி, திருநின்றவூர் பெருங்களத்தூர், வண்டலூர், மேடவாக்கம் கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.