சென்னை ஆக, 27
சர்வதேச 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை, மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த 28ம் தேதி நடந்த போட்டியின் துவக்க விழாவுக்கு, பிரதமர் மோடி வந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதற்கு மாற்றாக, மேற்கண்ட நான்கு மாவட்டங்களில், இன்று அரசு அலுவலகம், பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை முதன்மை கல்வி அலுவலகம், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், ஆசிரியர் பயிற்சி வகுப்பு உள்ளதால், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு பள்ளிகள் உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, முதன்மை கல்வி அலுவலகம் பொது அறிவிப்பு வெளியிடவில்லை.