Category: கிருஷ்ணகிரி

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.41¼ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

கிருஷ்ணகிரி அக், 7 கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.41 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு…

வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது.

கிருஷ்ணகிரி அக், 5 வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜொடுகொத்தூர் கிராமத்தில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மோகன் என்பவர் வீட்டில் மதுபாட்டில் வைத்து விற்பனை…

பாரதிய ஜனதா சார்பில் ரத்ததான முகாம்

கிருஷ்ணகிரி அக், 2 கெலமங்கலத்தில் பாரதியஜனதா கட்சி சார்பில், அங்குள்ள சமுதாய கூடத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இதற்கு இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட தலைவர் நாகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி…

ராயக்கோட்டையில் பகத்சிங் பிறந்த நாள் விழா.

கிருஷ்ணகிரி செப், 29 அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் சுதந்திர போரட்ட தியாகி பகத்சிங்கின் பிறந்த நாள் விழா ராயக்கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பேருந்து நிலையத்தில் பகத்சிங்கின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக ராயக்கோட்டை இளைஞர் பெருமன்றத்தின் சார்பில்…

தேன்கனிக்கோட்டையில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்.

கிருஷ்ணகிரி செப், 26 பொதுமக்கள் அச்சமின்றி பணியாற்றவும், மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் கொடி அணி வகுப்பு நடத்தினர். அதன்படி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் நடந்த கொடி அணிவகுப்பை…

2 ஆண்டுகளுக்கு பிறகு யஷ்வந்த்பூர்- ஓசூர் இடையே மின்சார ரெயில் மீண்டும் இயக்கம். பொதுமக்கள் மகிழ்ச்சி.

கிருஷ்ணகிரி செப், 23 கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் யஷ்வந்த்பூர்- ஓசூர் இடையேயான மின்சார ரயில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இதனால் நாள்தோறும் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு பணிக்கு செல்வோர், வியாபாரிகள் அவதியடைந்தனர். தற்போது கொரோனா…

மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் மீண்டும் சலுகை வழங்க ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்.

கிருஷ்ணகிரி செப், 21 தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அரைநாள் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்…

கிருஷ்ணகிரியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி செப், 18 பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதி ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று சமூகநீதி நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர்…

தொடர் மழையால் சூளகிரி பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி.

கிருஷ்ணகிரி செப், 17 கடந்த ஒரு மாத காலமாக சூளகிரி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் சூளகிரி அருகே சின்னார், தொட்டி, மைதாண்டபள்ளி, செம்பரசனபள்ளி, கட்டிகானபள்ளி, மாரண்டபள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் தக்காளி செடியிலேயே அழுகி…

புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது.

கிருஷ்ணகிரி செப், 16 கலுகொண்டப்பள்ளி சாலையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தளி அருகே கனமனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில் ரூ.58 ஆயிரம் மதிப்பிலான 87 கிலோ தடை…