கிருஷ்ணகிரி செப், 18
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதி ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று சமூகநீதி நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழியை எடுத்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் உறுதிமொழியை படிக்க, அனைவரும் திரும்ப படித்து உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஆட்சியரிடன் நேர்முக உதவியாளர் வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், ஆட்சியர் அலுவலக மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.