கிருஷ்ணகிரி ஜூன் 25
தமிழகத்தில் தங்கம், கிராபைட் உள்ளிட்ட அரியவகை தனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு மையம் கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் குத்ரேமுக் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்தன. இவற்றுக்கு, மத்திய அரசின் NMETஆய்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.