கிருஷ்ணகிரி செப், 16
கலுகொண்டப்பள்ளி சாலையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தளி அருகே கனமனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில் ரூ.58 ஆயிரம் மதிப்பிலான 87 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த சென்னை அம்பத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சரவணன், சென்னை ஆவடி திருநின்றயூர் அமிர்தலிங்கம் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கார், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.