கிருஷ்ணகிரி செப், 14
கிருஷ்ணகிரி அரசு பெண்கள், காவேரிப்பட்டணம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, பர்கூர் சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் 1,558 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார். உடன் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.