Category: மாநில செய்திகள்

தோல் நோயால் இறக்கும் பசு மாடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் நிவாரணம். முதலமைச்சர் அறிவிப்பு.

பெங்களூரு செப், 30 முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், வடகர்நாடக பகுதியில் பசு மாடுகளுக்கு கட்டி தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகின்றன. அவ்வாறு…

ஆபாச இணைய தளங்களை முடக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

புதுடெல்லி செப், 30 நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 67 ஆபாச இணையதளங்களை முடக்கவும், 2021 ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதற்காகவும் இணையதள சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அனுப்பிய…

தேவ கவுடாவை சந்தித்து நலம் விசாரித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பெங்களூரு செப், 30 முன்னாள் பிரதமர் தேவ கவுடா உடல்நலக் குறைவால் பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு…

நெல், கரும்பு விவசாயிகளுக்கு நிவாரண தொகை.

புதுச்சேரி செப், 29 புதுச்சேரி கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு விவசாயிகளுக்கான நிவாரண தொகை அவரவர் வங்கிக்கணக்கில் ஒரு வாரத்தில் செலுத்தப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்த நிவாரண தொகை ஒருவார காலத்துக்குள் புதுவை மற்றும் காரைக்கால் விவசாயிகளுக்கு அவரவர்…

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்.

ஐதராபாத் செப், 29 தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி…

புதுவை மரப்பாலம் சந்திப்பில் ரூ.58 கோடியில் மேம்பாலம்.

புதுச்சேரி செப், 28 புதுவை மரப்பாலம் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க இந்திய அரசின் சார்பு நிறுவனமான தேசிய…

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி. ரூ. 7 லட்சம் கோடி இழப்பு.

மும்பை செப், 27 சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால் பங்கு சந்தை வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. தொடர்ந்து நான்காம் நாள் வந்த நிலையால் வர்த்தகத்தில் இடையே நிப்டி 17,000 புள்ளிக்கும் கீழ் சரிந்தது நேற்றைய வர்த்தகத்தில் தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து மற்ற…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

புதுடெல்லி செப், 26 பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி உள்பட பல நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. வட்டி விகித அதிகரிப்பு அன்னிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவையை அதிகரித்து அதன் மதிப்பை உயர்த்தியுள்ளது. மேலும்…

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய தங்கம். சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்.

மங்களூரு செப், 26 சர்வதேச விமான நிலையம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. துபாயில் இருந்து மங்களூருவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.

புனே செப், 25 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பு, அன்னிய சந்தைகளில் அமெரிக்க டாலர் வலுவடைந்தது, உள்நாட்டு பங்கு வர்த்தகம் மற்றும் கச்சா…