புதுச்சேரி செப், 29
புதுச்சேரி கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு விவசாயிகளுக்கான நிவாரண தொகை அவரவர் வங்கிக்கணக்கில் ஒரு வாரத்தில் செலுத்தப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இந்த நிவாரண தொகை ஒருவார காலத்துக்குள் புதுவை மற்றும் காரைக்கால் விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் புதுவை பகுதியில் 6 ஆயிரத்து 925 விவசாயிகளும், காரைக்கால் பகுதியில் 4 ஆயிரத்து 979 விவசாயிகளும், ஏனாமில் 231 விவசாயிகளும் பயனடைவர். மொத்தமாக ரூ.10 கோடியே 34 லட்சத்து 56 ஆயிரத்து 400 கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு, காய்கறி மற்றும் பப்பாளி பயிர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.