மும்பை செப், 27
சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால் பங்கு சந்தை வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. தொடர்ந்து நான்காம் நாள் வந்த நிலையால் வர்த்தகத்தில் இடையே நிப்டி 17,000 புள்ளிக்கும் கீழ் சரிந்தது நேற்றைய வர்த்தகத்தில் தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து மற்ற துறை பங்குகள் அனைத்தும் குறைந்த விலைக்கு கை மாறின. குறிப்பாக உலோகம், மோட்டார் வாகனம், பொதுத்துறை வங்கிகள் எண்ணெய-எரிவாயு, ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் விலை பெரும் சரிவை சந்தித்தது.
மேலும் மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 269.86 லட்சம் கோடியாக சரிந்தது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.