Category: திருநெல்வேலி

காவல் கண்காணிப்பாளர் – கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் நிர்வாகிகள் சந்திப்பு.

நெல்லை செப், 27 நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் விபத்துகள் நடைபெறும் முக்கிய சாலைகள் கண்டறியப்பட்டு, விபத்துகளை தவிர்க்கும் விதமாக ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. அதே…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு.

நெல்லை செப், 27 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலின் இடதுபுறத்தில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது.இந்த கட்டிடத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. பின்னர் மாநகர காவல் அலுவலகம் இயங்கி வந்தது.…

மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

நெல்லை செப், 26 தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய துணை மின் நிலையங்களுக்கான உரிய பதவிகளை அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு…

பதப்படுத்தப்பட்ட மீன்கள் பறிமுதல். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

நெல்லை செப், 26 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மீன் கடைகளில் இன்று உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். நெல்லை உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், மீன்வளத்துறை உதவி…

சேரன்மாதேவியில் உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு கோலப்போட்டி.

நெல்லை செப், 25 உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக சில தனியார் அமைப்புகளுடன் இணைந்து நெல்லை நீர்வளம் என்ற அமைப்பின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துதல், கோலப்போட்டி, மிதிவண்டி பேரணி உள்பட…

களக்காடு அருகே கால்வாயில் வலம் வரும் ராஜநாகம்.

நெல்லை செப், 25 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே உள்ள இலவடி அணை கால்வாய்களில் ராஜநாகம் ஒன்று சுற்றி வருகிறது. 15 அடி நீளம் கொண்ட அந்த ராஜநாகம் இலவடி அணை, வண்ணாந்துரை ஓடை, சீவலப்பேரியான்…

பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடக்கம். சபாநாயகர் அப்பாவு மரக்கன்றுகளை நட்டு தொடக்கம்.

நெல்லை செப், 24 தமிழ்நாட்டின் தற்போதைய பசுமை பரப்பினை 28.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்திட முடிவு செய்து பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படும் என கடந்த நிதிநிலை அறிக்கையின் போது நிதித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று உலக ஆறுகள்…

புரட்டாசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

நெல்லை செப், 24 தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதி ஸ்தலங்கள் அமைந்துள்ளன. 108 திவ்யதேச ஸ்தலங்களில் இடம் பெற்றுள்ள இத்தகைய கோவில்கள் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி இரட்டை திருப்பதி, பெருங்குளம் தென்திருப்பேரை திருக்கோளூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களில்…

அரசு விருந்தினர் மாளிகையில் மனித உரிமை மீறல்கள் குறித்த 25 வழக்குகள் விசாரணை.

நெல்லை செப், 24 நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணைய விசாரணை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 29 ம்தேதி மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை கடைசியாக நடைபெற்றது.…

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க 2 நாள் சிறப்பு முகாம்.

நெல்லை செப், 23 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடிகளிலும் 2 நாட்கள் சிறப்பு முகாம்…