நெல்லை செப், 26
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய துணை மின் நிலையங்களுக்கான உரிய பதவிகளை அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மேலும் பாளை தியாகராஜ நகர் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.