Spread the love

நெல்லை செப், 26

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மீன் கடைகளில் இன்று உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். நெல்லை உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், மீன்வளத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம், ஆய்வாளர் தேன்மொழி அடங்கிய குழுவினர் பாளையங்கோட்டை சமாதானபுரம், சீவலப்பேரி ரோடு, சாந்தி நகர், மகாராஜாநகர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவரும் கடைகளில் சோதனை நடத்தினர்.

இந்த ஆய்வின்போது மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்வது தெரியவந்தது. அதன்படி பதப்படுத்தப்பட்ட 47 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து கிருமி நாசினி தெளித்து அழிக்கப்பட்டது. அதன்மதிப்பு 22,570 ஆகும்.

மேலும் பதப்படுத்தப்பட்ட மீன்கள் 2 முதல் 3 நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால் அதனை வாங்கி உண்ணும் பொதுமக்களுக்கு வயிற்றுக்கோளாறு, வாந்தி மற்றும் பல்வேறு கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே அதனை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *