நெல்லை செப், 25
உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக சில தனியார் அமைப்புகளுடன் இணைந்து நெல்லை நீர்வளம் என்ற அமைப்பின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துதல், கோலப்போட்டி, மிதிவண்டி பேரணி உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
அதன்படி சேரன்மகாதேவி பெருமாள் கோவில் அருகே கிராம உதயம் என்ற அமைப்புடன் இணைந்து கோலப்போட்டி நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக சேரன்மகாதேவி துணை ஆட்சியர் ரிஷப் கலந்துகொண்டு மரக்கன்றுகள் வழங்கி தூய்மை பணிகளை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கோலப்போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் ஆறுகள் பாதுகாப்பது, பிளாஸ்டிக்கை பயன்படுத்துவயை தவிர்ப்பது உள்ளிட்ட வசனங்கள் அடங்கிய கண்களை கவரும் விதமாக பல்வேறு வண்ணங்களில் கோலம் போட்டு அசத்தினர்.