நெல்லை செப், 25
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே உள்ள இலவடி அணை கால்வாய்களில் ராஜநாகம் ஒன்று சுற்றி வருகிறது. 15 அடி நீளம் கொண்ட அந்த ராஜநாகம் இலவடி அணை, வண்ணாந்துரை ஓடை, சீவலப்பேரியான் கால்வாய்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது.
பகல் நேரங்களிலும் இரை தேடி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளிவந்த ராஜநாகம் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் இப்பகுதியிலேயே சுற்றி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் கால்வாய்களில் குளிக்க வரும் பொதுமக்களும் ராஜநாகத்தை கண்டு அலறியடித்து ஓடுகின்றனர்.
இதனால் கால்வாய்களில் குளிக்க செல்லும் பொதுமக்களும், விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும் பீதி அடைந்துள்ளனர். எனவே இந்த ராஜநாகத்தை வனத்துறையினர் உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.