நெல்லை செப், 24
தமிழ்நாட்டின் தற்போதைய பசுமை பரப்பினை 28.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்திட முடிவு செய்து பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படும் என கடந்த நிதிநிலை அறிக்கையின் போது நிதித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று உலக ஆறுகள் தினம் அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடக்க நிகழ்வு நெல்லை சந்திப்பு தாமிரபரணி நதிக்கரையில் தைப்பூச மண்டபம் அருகே மாவட்ட ஆட்சியர விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி முருகன் மற்றும் கல்லூரி மாணவிகள், நெல்லை நீர்வள அமைப்பினர், இயற்கை ஆர்வலர்கள், ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
