Month: July 2024

கீழக்கரையில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!

கீழக்கரை ஜூலை, 2 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலூகா ( Regular ) வட்டாட்சியராக ஜமால் முஹம்மது அவர்கள் பணி ஏற்று கொண்டார். இவர் ஏற்கனவே கீழக்கரை தேர்தல் பிரிவு, மற்றும் வட்ட வழங்கல் பிரிவு தாசில்தார் ஆக பணியாற்றியவர் என்பதும்,…

துபாயில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற “Business Excellence” விருது-2024

துபாய் ஜூலை, 2 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற “Business Excellence” விருது நிகழ்ச்சி துபாய் அல் பர்சா பகுதியில் பர்சா மில்லினியம் ஹைட் ஸ்டார் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் மன்றம் தலைவர்…

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய்க்கு கூடுதல் வட்டி.

நீலகிரி ஜூலை, 2 மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை கூட்டுறவு வங்கியில் சேமித்தால் கூடுதல் வட்டி கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. வங்கியில் பொதுவாக பணம் சேமிக்க 3 முதல் 4 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். ஆனால் மகளிர் உரிமைத்தொகை…

வேகமாக பரவுகிறது ஜிகா வைரஸ்.

பூனா ஜூலை, 2 மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் ஏடிஎஸ் கொசு மூலம் பரவும் ஜிகா வைரசால் மருத்துவர் உள்ளிட்ட நான்கு பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இரு கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பூனேவின்…

பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வழி கல்வி முதல்வருக்கு பரிந்துரை.

சென்னை ஜூலை, 2 பள்ளி, கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் குழு தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தது. மேலும் பள்ளிக்கல்வியில் தமிழை முதல் மொழியாக முதன்மைப்படுத்த வேண்டும். தொடக்கநிலை வகுப்பு முதல்…

எல்லை தாண்டிய மீனவர்கள் சிறை.

ராமநாதபுரம் ஜூலை, 2 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தனுஷ்கோடி, பாம்பன், நம்புதாளை பகுதிகளைச் சேர்ந்த 4 நாட்டு படகுகளுடன் 25 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று அதிகாலை சிறை பிடித்து சென்றது. எல்லை தாண்டிய வழக்கில் கைதான ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்…

இன்று பதிலளிக்கிறார் பிரதமர் மோடி.

புதுடெல்லி ஜூலை, 2 குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று…

தலைமை ஆசிரியர்களுக்கு நாளை வரை அவகாசம்.

சென்னை ஜூலை, 2 முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விபரங்களை இணையத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. 2024-25 ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 21 ல் திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக…