கீழக்கரை ஜூலை, 2
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலூகா ( Regular ) வட்டாட்சியராக ஜமால் முஹம்மது அவர்கள் பணி ஏற்று கொண்டார். இவர் ஏற்கனவே கீழக்கரை தேர்தல் பிரிவு, மற்றும் வட்ட வழங்கல் பிரிவு தாசில்தார் ஆக பணியாற்றியவர் என்பதும், மாவட்ட வருவாய் துறை சங்கத்தில் செயலாளர் ஆகவும் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இருந்த பழனிக்குமார் அவர்கள் பணியிடை மாறுதல் பெற்று ராமநாதபுரம் தாலூகா சமூக பொறுப்பு வட்டாட்சியர் ஆக பணி மாறுதல் ஆகியுள்ளார். ” கீழக்கரையில் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியும், இங்குள்ள மக்கள் அதிகாரியாக பார்க்காமல் உரிமை எடுத்து பழகியதும் ஆதரவு தந்ததும் 25 வருடமாக பணியாற்றியதில் மறக்க முடியாத காலம்” என்றார்.
பணியிட மாறுதலில் செல்லும் வட்டாட்சியர் பழனிக்குமார் அவர்களின் பணி என்பது மக்கள் நல பணியாகவே இருந்தது என்றும் அனைத்து தரப்பு மக்களோடும் சகோதரத்துவத்தை கடை பிடித்தது பாராட்டிற்குரியது என்றும் கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் M.K.E. உமர் அப்துல் காதர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேபோன்று அல்மஸ்ஜிதுர் ரய்யான் A/C பஜார் பள்ளி டிரஸ்டி இம்பாலா சுல்தான் கூறும் போது:- மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர் தாசில் தார் பழனிக்குமார் என குறிப்பிட்டு அவருக்கும் புதிதாக பொறுப்பேற்றுள்ள தாசில்தார் ஜமால் முஹம்மது அவர்களுக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்