சென்னை ஜூலை, 2
பள்ளி, கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் குழு தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தது. மேலும் பள்ளிக்கல்வியில் தமிழை முதல் மொழியாக முதன்மைப்படுத்த வேண்டும். தொடக்கநிலை வகுப்பு முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ் வழி கல்வியை வழங்க வேண்டும். தமிழ் வழி கற்பித்தல் தொடர்பான ஆராய்ச்சி பிரிவை அமைக்கவும் பரிந்துரைத்துள்ளது.