புதுடெல்லி ஜூலை, 2
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று பிரதம மோடி பதிலளிக்க உள்ளார். மதிய உணவு இடைவெளிக்கு பின் மக்களவையில் பிரதமர் பதிலளிப்பார் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.