சென்னை ஜூலை, 2
நீட் தேர்வுக்கு எதிராக நாளை திமுக மாணவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை என பேரவையால் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் சென்னையில் நாளை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக ஜூன் 24ம் தேதி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி விவகாரம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.