Month: June 2024

பிரதமர் மோடியின் வருகை ஒத்திவைப்பு.

சென்னை ஜூன், 17 சென்னை-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஜூன் 20 சென்னை வருவதாக இருந்த பிரதமர் மோடியின் பயணம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர்,…

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை.

சென்னை ஜூன், 17 தமிழகத்தில் நேற்று முன்தினம் காலை 5 மணி முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு சாப்ட்வேர் பிரச்சினையை…

நெதர்லாந்து அணிக்கு 202 ரன்கள் இலக்கு.

இலங்கை ஜூன், 17 இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை டி20 போட்டியில் நெதர்லாந்து அணிக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி நேபாள அணியின் பந்துவீச்சை ஆரம்ப முதலே அடித்து நொறுக்கியது. அந்த அணியின் அசலாங்கா 46,…

பங்கு சந்தைகள், வங்கிகளுக்கு இன்று விடுமுறை.

சென்னை ஜூன், 17 இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் இன்று கொண்டாடப்படுவதால் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்கு சந்தைகள் இன்று செயல்படாது. இதே போல் பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கும் விடுமுறை…

ஜூன், 17

தியாகத்திருநாளாம் பக்ரீத் பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் வணக்கம் பாரதம் ஆசிரியர்கள், நிருபர்கள், அலுவலர்கள் மற்றும் பத்திரிக்கை ஊழியர்கள் சார்பாக இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

பக்ரீத் பண்டிகை வரலாறு.

ஜூன், 17 பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம்.…

அமீரகத்தில் பக்ரித் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

துபாய் ஜூன், 16 ஐக்கிய அரபு அமீரகத்தில் தியாகத் திருநாள் எனப்படும் பக்ரித் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பக்ரித் பண்டிகை கொண்டாடப்பட்டது. தியாகத் திருநாளையொட்டி அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, ஃபுஜைரா,…

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு.

ராமநாதபுரம் ஜூன், 16 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25ம் தேதி மதியம் 3:30 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள்…

தக்காளி விலை ₹80ஆக உயர்வு.

சென்னை ஜூன், 16 விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று சில்லறை விற்பனையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகா, ஆந்திராவில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் விரைவில் விலை ரூ.100 தொடலாம்…