சென்னை ஜூன், 17
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் இன்று கொண்டாடப்படுவதால் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்கு சந்தைகள் இன்று செயல்படாது. இதே போல் பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் சேவைகள், மொபைல் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து செயல்படும்.