சென்னை ஜூன், 17
சென்னை-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஜூன் 20 சென்னை வருவதாக இருந்த பிரதமர் மோடியின் பயணம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர், பிரதமர் கலந்து கொள்வதாக இருந்த பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டமும் ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.