கேரளா ஜூன், 18
வயநாடு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் வயநாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட உள்ளதாக நினைத்து பெரு மகிழ்ச்சி அடைவதாகவும், ராகுல் அத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இல்லை என்ற உணர்வு மக்களிடையே ஏற்படாத வகையில் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார். மேலும் தானும் ராகுலும் வயநாடு மக்களுடன் இருப்போம் என்றார்.