புதுடெல்லி ஜூன், 18
பி எம் கிஷான் திட்டத்தில் நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 16 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக பதவி ஏற்றதும் 14வது தொகையை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இதை தொடர்ந்து இன்று விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது.