சென்னை ஜூன், 18
தமிழகத்தில் மினி பேருந்துகள் இயக்கம் மீண்டும் அனுமதி அளிக்கப்படுவதற்கான புதிய வரைவு திட்ட அறிக்கை அரசு வெளியிட்டுள்ளது. 1997-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் மினி பேருந்துகள் இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படுவதுடன் எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது என்பது குறித்து ஆர்டிஓக்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.