Month: December 2022

மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

ராணிப்பேட்டை டிச, 10 சோளிங்கரில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க சோளிங்கர் வட்டார மேலாளர் அலமேலு தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் சாகுல் அமீது…

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக நாகை, வேளாங்கண்ணியில் கடல் சீற்றம்.

நாகப்பட்டினம் டிச, 10 வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நாகை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்தது. கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நாகை,…

கடல் சீற்றம். விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம்

மயிலாடுதுறை டிச, 10 மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் 16 கிராம மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த…

மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கிருஷ்ணகிரி டிச, 10 ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், வரி வசூல் மற்றும் சுகாதார, தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப்…

ஊராட்சி செயலக கட்டிடம் கட்டுவதற்கு நடைபெற்ற பூமி பூஜை.

கரூர் டிச, 10 குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அய்யர் மலை பகுதியில் சிறிய பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் அனைத்து வசதிகளுடன் ஊராட்சி செயலக கட்டிடம் வேண்டி தலைவர் பாப்பாத்தி பிச்சை கோரிக்கை வைத்ததை…

மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு.

தேனி டிச, 10 தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் சார்பில், பதவி உயர்வில் செல்ல மறுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கண்டித்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க…

மாவட்ட ஆட்சியர் குழு ஆய்வு.

மண்டபம் டிச, 10 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மீன் இறங்குதளம் கட்டப்பட்டு வருவதை நேற்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் குழு, உறுப்பினர்கள், சட்டமன்ற…

மனித உரிமைகள் தினம்.

தர்மபுரி டிச, 10 மனித உரிமைகள் தினம் டிசம்பர் அனுசரிக்கப்படுவதை ஒட்டி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக…

தொழில் முனைவோர்களுக்கு மானியக்கடன் வழங்கும் நிகழ்வு.

காஞ்சிபுரம் டிச, 10 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டாரங்களிலுள்ள தொழில் முனைவோர்களுக்கு இணை மானியத் திட்டத்தின் கீழ் வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட கடன் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் வாழ்ந்து காட்டுவோம்…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

தர்மபுரி டிச, 10 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த வட்டாரங்கள் அளவிலான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல்…