கரூர் டிச, 10
குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அய்யர் மலை பகுதியில் சிறிய பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் அனைத்து வசதிகளுடன் ஊராட்சி செயலக கட்டிடம் வேண்டி தலைவர் பாப்பாத்தி பிச்சை கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, அய்யர்மலை பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை 2022- 23ம் ஆண்டிற்கான ஊராட்சி செயலக கட்டிடம் கட்டுவதற்கு நடைபெற்ற பூமி பூஜை விழாவில் குளித்தலை சட்ட மன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்,
இவ்விழாவில் கரூர் மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தியாகராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வம், வைகைநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பெரியசாமி, மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், நீலகண்டன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.