மயிலாடுதுறை டிச, 10
மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் 16 கிராம மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் ரூ.148 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் முறையாக அமைக்கப்படாததால் துறைமுகத்தின் உள்ளே படகு தளத்தில் படகுகளை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அருகில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து வருகிறது.