Month: October 2022

வேதாரண்யத்தில் கடல் சீற்றம். மீனவர்கள் வேலை நிறுத்தம்.

நாகப்பட்டினம் அக், 27 நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன.வங்க கடலில் சித்ராங் புயல் கரை கடந்தநிலையில் ேநற்றும் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கடல் கடும் சீற்றமாக காணப்பட்டது.…

வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கைத்தறித்துறை ஆணையர் ஆய்வு.

கரூர் அக், 27 கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்…

அதிமுக பொதுக்குழு கூட்டம்.

ராணிப்பேட்டை அக், 27 அதிமுக 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு ராணிப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி துணை கொறடாவுமான சட்ட மன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சீனிவாசன்,…

அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 69 பேர் மீது வழக்கு.

திருவள்ளூர் அக், 27 திருவள்ளூர் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2…

குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைபொருள் பயன்பாடு குறித்த தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை.

கன்னியாகுமரி அக், 27 போதை பொருள் பயன்பாடு தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் முன்னிலை…

புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பம்.

காஞ்சிபுரம் அக், 27 புதுமைப்பெண் திட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண்…

ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

கள்ளக்குறிச்சி அக், 27 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை ஓய்வூதிய இணை இயக்குனர் கமலநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, சென்னை…

இருந்து 2,600 கன அடி நீர் வெளியேற்றம்.

ஈரோடு அக், 27 ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர்…

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு.

திண்டுக்கல் அக், 27 திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டி நாயக்கன்பட்டி செங்குளம் ரூ.18.50 லட்சம் மதிப்பில் தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திண்டுக்கல் மாவட்ட அனைத்து துறை கூடுதல்…

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு அக், 27 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 250 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் தினமும் 60 படகில் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்த பகுதிகளில்…