ராணிப்பேட்டை அக், 27
அதிமுக 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு ராணிப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி துணை கொறடாவுமான சட்ட மன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சீனிவாசன், நகர அவைத் தலைவர் குமரன், நகர செயலாளர்கள் மோகன், இப்ராஹீம் கலிலுல்லா, சோளிங்கர் ராமு, ஒன்றிய செயலாளர்கள் பெல் கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், விஜயன் ராஜா, ராணிப்பேட்டை நகர நிர்வாகிகள் பிலிப்ஸ், தியாஜராஜன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர மாவட்ட பிரதிநிதி அஸ்லாம்கான் நன்றி கூறினார்.