கீழக்கரை ஏப்ரல், 13
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் ஜெயபெருமாள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.தொகுதி முழுவதும் சூறாவளி சுற்று பயணம் செய்து ஓட்டு வேட்டையாடி வரும் வேட்பாளர் ஜெயபெருமாள் இன்று(13.04.2024) காலை 10.30 மணிக்கு கீழக்கரை வருகை தந்தார்.
முன்னதாக முக்குரோடு,கிராம நிர்வாக அலுவலகம் சந்திப்பு,பீஸா பேக்கரி சந்திப்புகளில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். பீஸா பேக்கரி சந்திப்பில் மக்களிடம் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
முன்னதாக SDPI கட்சி முன்னாள் நகர் தலைவர் ஹமீது பைசல் வேட்பாளரை வரவேற்று அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை வைத்தார்.
வேட்பாளர் ஜெயபெருமாள் உடன், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி, கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர்ஹுசைன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் ஆரிப் ராஜா, கீழக்கரை SDPI கட்சி நகர் தலைவர் அபுதாஹிர், செயலாளர் காதர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தனர்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்