Spread the love

ஈரோடு அக், 27

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17 ம்தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டுபள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *