ஈரோடு அக், 29
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் புதிய போக்குவரத்து விதிமுறை கள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி வாகன விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது புதிய விதிமுறைப்படி ரூ.1000 விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் விதிமுறைகள் மீறுபவர்க ளுக்கான கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் வாகன விதிமுறை மீறுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, செல்போன் பேசியப்படி வாகனம் ஓட்டி யது என 277 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.