ஈரோடு அக், 30
ஈரோடு ஊராட்சி ஒன்றியம் பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம்பாளையம் வடக்கு நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மேட்டு நாசுவம் பாளையம் வடக்கு நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு, கிராம கணக்கு பதிவேடு, அடங்கல், முதியோர் உதவித் தொகை பதிவேடு, புறம் போக்கு நிலங்கள் தொடர்பான பதிவேடு, விளை நிலங்கள் தொடர்பான பதிவேடு உள்ளிட் ஆவணங்களை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, ஈரோடு வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.