ஈரோடு அக், 31
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள், தரவு உள்ளீட்டாளர்கள், தட்டச்சர்கள், வரி வசூலர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்கள் என 1800-க்கும் மேற்பட்டோர் கடந்த 15 வருடமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அவுட் சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து இன்று 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.